வெங்கல் அருகே லாரி மோதி வியாபாரி பலி

வெங்கல் அருகே லாரி மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்கல் அருகே லாரி மோதி வியாபாரி பலி
Published on

பெரியபாளையம்:

மாதவரம் அம்பேத்கார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46).தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். இவர் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை என்ற கிராமத்துக்கு விவசாய நிலத்தில் உள்ள தர்பூசணியை மொத்தமாக வாங்க வந்தார். செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மூலக்கரை பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார்.

அப்போது திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை நோக்கி சென்ற லாரி ஒன்று இவர் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியையும், டிரைவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com