திசையன்விளையில் வியாபாரிகள் சங்க விழாவில் வெள்ளையன் பங்கேற்பு

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்.
வெள்ளையன்
வெள்ளையன்
Published on

திசையன்விளை:

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ஜெயகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், சங்க அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து அவருக்கு வீரவாள் வழங்கப்பட்டது.

விழாவில் பேரவையின் மாவட்ட தலைவர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட செயலாளர் ராமகிரு‌ஷணன், மாநில பொது செயலாளர் கருணாகரன், மாநில இளை ஞரணி அமைப்பாளர் மாணிக்கம், நெல்லை தெற்கு மாவட்ட பண்ணை செல்வகுமார், மாவட்ட பொருளாளர் மீரான், நகர ஆலோசகர் ஏ.கே.கணேசன், நிர்வாகிகள் திரவியம் பொன்ராஜ், பிலிப்போஸ் டேனியல், குருநாதன், நாமதுரை, அன்சார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com