

தர்மபுரி:
தர்மபுரி காந்தி நகரைச் சேர்ந்தவர் வீரமார்த்தாண்டன். இவரது மகன் தமிழ்தம்பி (வயது 28). இவருக்கு திருமணமாகி திவ்யபாரதி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று தமிழ்தம்பி பென்னாகரத்தில் இருந்து தர்மபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது பென்னாகரத்தில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த தமிழ்தம்பியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணயளவில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.