தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போலீஸ்காரர் பலியானார்.
தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
Published on

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம அருகே உள்ள அனுமந்தன்பட்டி அம்பலகாரர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு (வயது 30). இவர் தேனி ஆயயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று இரவு வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். சீலையம்பட்டி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்தலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அவரது அண்ணன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com