

தமிழ்நாடு பிரிமீயர் தொடரின் 19-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் கில்லீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ராஜூ மற்றும் கோபிநாத் களமிறங்கினர். கோபிநாத் 1 ரன்னிலும், ராஜூ 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கௌசிக் காந்தி மற்றும் சசிதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சசிதேவ் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கௌசிக் காந்தி 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹரிஷ் குமார் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 6 சிக்சர்கள் உள்பட 53 ரன்கள் விளாசினார்.