சாத்தூர் அருகே பட்டாசு தொழிலாளர்கள் 3 பேர் விபத்தில் பலி

சாத்தூர் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பட்டாசு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

சிவகாசி:

சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள சல்வார் பட்டியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சிவகாசியை அடுத்த சூரநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலை சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 14 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பட்டாசு ஆலைக்கு சொந்தமான வேன் புறப்பட்டது. சாத்தூர் -தாயில்பட்டி ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் வேன் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குருமுத்து அம்மாள் (வயது 50), துரைப்பாண்டி (14), வேன் டிரைவர் கார்த்திக் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் பலியானவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com