கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து (கோப்புப்படம்)
விபத்து (கோப்புப்படம்)
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள குழிநாவல் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு வேனில் பொன்னேரி அருகே உள்ள கள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சென்றனர்.

பின்னர் இரவு அவர்கள் அதே வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வேனை டிரைவர் சுதாகர் என்பவர் ஓட்டினார்.

வேன் பூங்குளம் என்ற கிராமத்தின் அருகே இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த நாகஜோதி , பாக்கியலட்சுமி , ஜோதி, ரேணுகா, பரிமளா, கண்ணகி, விஜயகுமாரி, அயலு, மலைமல்லி , காஞ்சனா மற்றும் ரூபா, கவுதம், முனுசாமி மற்றொரு முனுசாமி என மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் கிசிக்சைக்காக சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com