இரட்டை இலை சின்னத்துக்கும் சோதனைக்கும் தொடர்பு இல்லை: வைத்திலிங்கம் எம்.பி.

இரட்டை இலை சின்னத்துக்கும் இந்த வருமான வரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
இரட்டை இலை சின்னத்துக்கும் சோதனைக்கும் தொடர்பு இல்லை: வைத்திலிங்கம் எம்.பி.
Published on

தஞ்சையில் வருகிற 29-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று விழாவுக்கான கால்கோள் நாட்டு விழா நடந்தது. இதில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கி , பூஜையை நடத்தி வைத்தார்.

இதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி: தினகரன் - நடராஜன் ஆகியோரது வீடுகளில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறதே?

பதில்: இது புதிதல்ல. சரியாக வருமான வரியை கட்டவில்லை என்றால் இதுபோன்ற சோதனை நடைபெறும். அதேபோல் இதுவும் நடந்துள்ளது.

கேள்வி:- இரட்டை இலை சின்னம் பெற தினகரன் முயற்சி செய்யும் வரும் வேளையில் அவரது அச்சுறுத்த இந்த சோதனை நடைபெறுகிறதா?

பதில்:-அதுபோல் எதுவும் இல்லை. இரட்டை இலை சின்னத்துக்கும், இந்த வருமான வரி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com