வைகை, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட ரெயில்களின் நேர மாற்றம் இன்று முதல் அமல்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பொதிகை, வைகை, பாண்டியன், மலைக்கோட்டை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வைகை, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட ரெயில்களின் நேர மாற்றம் இன்று முதல் அமல்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை:

ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய ரெயில்களையும், பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரெயில்களையும் இயக்கி வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நெல்லை, சென்னை சென்டிரல்-மதுரை இடையே புதிய ரெயில்களை அறிவித்தது.

மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பொதிகை, வைகை, பாண்டியன், மலைக்கோட்டை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தை பயணிகள் வசதிக்காக மாற்றம் செய்தும், சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய மின்சார ரெயில்களையும் அறிவித்தது.

இந்த அறிவிப்பு இன்று(புதன்கிழமை) முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது. அதன்படி, தெற்கு ரெயில்வேயின் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com