வடமதுரை அருகே கோவில் இடம் ஆக்கிரமிப்பு - கோஷ்டி மோதல்

வடமதுரை அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்ததை தட்டிக் கேட்டதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
வடமதுரை அருகே கோவில் இடம் ஆக்கிரமிப்பு - கோஷ்டி மோதல்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள சிட்டம்பட்டியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இநத கோவிலில் மருதை என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலில் விழா நடத்துவதற்காக அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை சிலர் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு தரப்பினர் அங்கு வந்து எங்கள் இடத்தில் கோவில் கட்டிக் கொண்டு இங்கு சாமி கும்பிடுகிறீர்களா? என அவர்களிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர்.

மேலும் கோவிலில் இருந்த பூஜை பொருட்கள், மற்றும் மேடையை அடித்து சூறையாடினர்.

இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோவிலையும் அங்கிருந்தவர்களையும் அடித்து தாக்கிய மாரியப்பன், தனம், கீதா, ராஜேஸ்வரி, பாலமுருகன், ராஜேந்திரன், சிவா, மணிமாறன், சித்ரா, முருகேசன் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com