ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரனை கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுனுசாமி (வயது 80), கூலி தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்துவிட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com