ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (65). விவசாயி.

இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். லட்சிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஊத்துக்கோட்டையிலிருந்து செங்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பூபாலனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பூபாலனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜனபன் சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மோதிய மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த செங்கரை கிராமத்தை சேர்ந்த ஜிதேந்தர் (32), விஷால் (25) ஆகிய வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பூபாலனின் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com