இந்திய தேசிய கீதத்தை இசைத்ததாக இணையத்தில் வைரலாகும் அமெரிக்க ராணுவத்தின் வீடியோ

அமெரிக்க ராணுவத்தினர் இந்திய தேசிய கீதத்தை இசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
Published on

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வழக்கமான ஆரவாரமின்றி நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களிடையே அமெரிக்க ராணுவம் இந்தியாவின் தேசிய கீதத்தை இசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்து உள்ளது. உண்மையில் இந்த வீடியோ அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே கூட்டு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது ஆகும். எனினும், இது சமீபத்திய சுதந்திர தினத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரல் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வைரல் பதிவுகளில் கூறப்படுவது போன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ராணுவம் இந்திய தேசிய கீதத்தை இசைக்கவில்லை என உறுதியாகி விட்டது.   

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com