உருளையன்பேட்டையில் நூதன முறையில் கார் திருட்டு

புதுவையில் நூதன முறையில் கார் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கார் திருட்டு (கோப்பு படம்)
கார் திருட்டு (கோப்பு படம்)
Published on

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது28). கார் டிரைவர். இவர் தனது காரை வாடகைக்கு விட்டு வந்தார். இதனை ஈரோட்டை சேர்ந்த அந்தோணி (39) என்பவர் புதுவையில் தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு கார் வாடகைக்கு தேவைப்படுவதாகவும் கூறி காரை வாடகைக்கு எடுத்துள்ளார்.

பின்னர் அதற்கான வாடகையை 2 முறை அப்துல் கரீமிடம் செலுத்தியுள்ளார். அந்தோணி வாடகைக்கு காரை எடுத்து ஒரு மாத காலம் முடிந்தும் காரை அப்துல்கரீமிடம் ஒப்படைக்காமல் காலம் கடத்தி வந்தார். இதனை அப்துல்கரீம் அந்தோணியிடம் கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் இருந்து வந்தார். 

இதுபற்றி அப்துல்கரீம் விசாரித்த போது இதேபோல் பலரிடம் அந்தோணி ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 

பின்னர் இதுகுறித்து அப்துல்கரீம் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கார் கடத்தலில் ஈடுபட்ட அந்தோணி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com