திருமணம் செய்ய மறுத்த காதலி: இரண்டாவது மாடியிலிருந்து கீழே தள்ளிய காதலன்

திருமணம் செய்ய மறுத்த காதலியை, இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் செய்ய மறுத்த காதலி: இரண்டாவது மாடியிலிருந்து கீழே தள்ளிய காதலன்
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கிஞ்சனா பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதையறிந்த காதலன், நேற்று அந்தப் பெண் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்கு வந்தான். தன்னைவிட்டு வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என தகராறு செய்தான். வீட்டில் யாரும் இல்லாததை கண்ட அவன், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றான்.

அந்தப் பெண் பயந்து அலறவே, ஆத்திரம் அடைந்த அவன், இரண்டாவது மாடியில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டான். அதன்பின் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயத்துடன் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஷாம்லி போலீசார், தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com