பட்டாசு குடோனில் தீ விபத்து- 3 பேர் பலி

உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மரணம்
மரணம்
Published on

குஷிநகர்:

உத்தர பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம் கப்தன்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உயர் ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கட்டிடத்தின் அண்டர்கிரவுண்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டாசுகள் வெடித்ததில் அருகில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com