சீன பட்டாசுகளை புறக்கணிக்க உ.பி. அரசு முடிவு

தீபாவளிக்கு சீன பட்டாசுகள் மற்றும் இதர பொருட்களை பயன் படுத்துவது இல்லை என்று உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
பட்டாசு  (கோப்புப்படம்)
பட்டாசு (கோப்புப்படம்)
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளியின் போது சீன பட்டாசுகள் அதிக அளவில் பயன்படுத்துவது வழக்கம்.

அதேபோல தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் விநாயகர், லட்சுமி சிலைகள், பல்வேறு விளக்குகள் போன்றவையும் சீனாவில் இருந்து வருவது உண்டு.

இந்த ஆண்டு தீபாவளிக்கு சீன பட்டாசுகள் மற்றும் இதர பொருட்களை பயன் படுத்துவது இல்லை என்று உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் இருந்து வெளிமாநிலங்களில் வேலை பார்த்த ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் சாமி சிலைகள், பட்டாசுகள் மற்றும் தீபாவளி பொருட்களை தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டு அந்த தொழிலில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதுசம்பந்தமாக சிறு, குறு தொழில் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீனாவை விட தரமான பொருட்களை எங்களால் உற்பத்தி செய்ய முடியும். எனவே சீனாவின் பொருட்களை இனி இறக்கு மதி செய்யமாட்டோம்.

அந்த பொருட்களுக்கு போட்டியாக எங்களுடைய உற்பத்தி பொருட்கள் இருக்கும் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com