களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை

திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

களியக்காவிளை:

களியக்காவிளையை அடுத்த மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சுதாகர் (வயது 39). இவர் பாறசாலை பகுதியில் லாரி ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதில் சுதாகர் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று குழிஞ்ஞான்விளை பகுதியில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் அவர் பிணமாக கிடந்ததை பார்த்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் சொர்ணலதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com