யுஎம் மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம்

யுஎம் லோஹியா டூ வீலர்ஸ் நிறுவனம் இரண்டு புதிய பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரெனகேடு கமாண்டோ க்ரூசர் கிளாசிக் மற்றும் மோஜேவ் என இரண்டு மாடல்கள் சார்ந்த தகவல்களை பார்ப்போம்.
யுஎம் மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம்
Published on

யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரெனகேடு கமாண்டோ கிளாசிக் மற்றும் மோஜேவ் என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.1.89 லட்சம் மற்றும் ரூ.1.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்களிலும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனகேடு கமாண்டோ கிளாசிக் ஸ்டான்டர்டு மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டூ-டோன் காப்பர் வைட் அல்லது கிளாசி பிளாக் நிறங்களில் கிடைக்கும் கமாண்டோ கிளாசிக் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பாலைவனமான மோஜேவ் சார்ந்து புதிய ரெனகேடு கமாண்டோ மோஜேவ் உருவாக்கப்பட்டுள்ளதாக யுஎம் மோட்டார்சைக்கிள் தெரிவித்துள்ளது. பாலைவன நிறத்தை தழுவிய பெயின்ட் மற்றும் முழுமையான மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூரிங் அம்சங்களான விண்ட்ஷீல்டு மற்றும் ஃபியூயல் டேன்க் போன் பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்களிலும் 279.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்டுள்ளது. எனினும் புதிய மாடல்களில் கார்புரேட்டர் வகை ஃபியூயல் அமைப்பிற்கு மாற்றாக EFI  சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 4-வால்வ் மோட்டார் கொண்டுள்ள இன்ஜின் 25.15PS மற்றும் 8,500rpm, 23Nm டார்கியூ 7,000rpm செயல்திறன் கொண்டுள்ளது.

இரண்டு புதிய ரெனகேடு கமாண்டோ மோட்டார்சைக்கிள்களிலும் 18-லிட்டர் ஃபியூயல் டேன்க் மற்றும் 179 கிலோ எடை கொண்டுள்ளது. இத்துடன் அகலமான டையர்களும், முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com