புரோ கபடி 2017: அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றி பெற்றது மும்பை

புரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி யூ மும்பா அணி நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
புரோ கபடி 2017: அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றி பெற்றது மும்பை
Published on

5-வது புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 5-வது கட்ட ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள யூ மும்பா அணியும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. யூ மும்பா அணி சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது.

இந்த போட்டியில் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அந்த அணியின் கேப்டன் அனுப்குமார் அதிகபட்சமாக 8 தொடு புள்ளிகள் எடுத்தார். அரியானா அணியின் விகாஸ் கண்டோலா 9 புள்ளிகள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நான்காவது வெற்றியை பதிவுசெய்தது.

மும்பை அணி, 24 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அரியானா ஸ்டீலர்ஸ் அணி, 23 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com