

ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் சாய்குந் பகுதியில் இன்று மாலை தீவிரவாதிகளை குறிவைத்து போலீசார் என்கவுண்டர் நடத்தினர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அம்மாநில போலீஸ் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
போலீசாரின் என்கவுண்டரில் தவறுதலாக குண்டு பட்டு ஒரு சிறுவன் உயிரிழந்ததாகவும், இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.