கரூரில் குடி போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

குடி போதையில் வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் குடி போதையில் தகராறில்  ஈடுபட்ட 2 பேர் கைது
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், மசக்கவுண்டன்புதூர் ஓ.கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவர்  ஓலப்பாளையம் நீரேற்று பாசன சங்கம் அருகில்   சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும்  இடையூறு செய்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணனை  கைது செய்தனர்.

அதேபோல் அண்ணாநகர் அருகே மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயவன் (38), இவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் நின்று கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம்  தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மாயவனை கைது செய்தனர்.பின்னர் அவரிடம்  தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com