காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட கச்வான் வனப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று பிற்பகல் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அடர்ந்த மரங்களுக்கு இடையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். 

சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com