காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட பிட்ரூ அக்கிங்கம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com