உ.பி.யில் பசு பாதுகாப்பு பெயரில் தொடரும் அட்டூழியம் - 2 வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்

உ.பி.யில் பசு கடத்தல் கும்பல் என்ற சந்தேகத்தில் வாலிபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். #CowProtectors
உ.பி.யில் பசு பாதுகாப்பு பெயரில் தொடரும் அட்டூழியம் - 2 வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்
Published on

வடமாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினர். மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளன. இதையும் மீறி தாக்குதல் நடைபெறுகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லியில் கவ் ரக்ஷா சேவா தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று 2 பேரை பிடித்து பெல்ட்டுகள் மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கினர். பசுக்களை கடத்தும் கும்பல் என நினைத்து அவர்களை தாக்கி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com