மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம்- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்டு
சஸ்பெண்டு
Published on

சென்னை:

புளியந்தோப்பு, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் அலிமா (வயது 45). இவருடைய கணவர் ஷேக் இப்ராகிம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அலிமா தனது கணவரையும், மகனையும் பிரிந்து தனியாக வசித்து வந்தார். அலிமா, வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார்.

நேற்று காலை வீட்டு வேலை செய்ய நாராயணசாமி தெருவில் அலிமா நடந்து சென்று கொண்டிருந்தார். சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால் அந்த தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதியில் சாலையோரம் பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயர், வெளியே தெரியும்படி இருந்தது.

மழைநீரில் நடந்து வந்த அலிமா, இதனை கவனிக்காமல் பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அலிமா உயிரிழந்தது தொடர்பாக இரு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com