ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் பலி
Published on

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள மாட்ரிபக் சொய்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் கூட்டாக இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com