ஈராக்கில் குர்திஷ் பயங்ரவாதிகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் - 12 பேர் பலி

ஈராக் நாட்டின் வடபகுதியில் குர்திஷ் பயங்ரவாதிகள் மீது துருக்கி விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் குர்திஷ் பயங்ரவாதிகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் - 12 பேர் பலி
Published on

ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்னும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள், கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர். இங்கிருந்தவாறு துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இவர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களை வேட்டையாடும் பணியில் துருக்கி நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்த குர்திஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக துருக்கி நாட்டு உளவுத்துறைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com