மேகாலயா கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது டிரக் மோதி விபத்து - 5 பேர் காயம்

மேகாலயா கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்தனர்.
மேகாலயா கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது டிரக் மோதி விபத்து - 5 பேர் காயம்
Published on

சிலாங்:

மேகாலயா கவர்னரான பன்வாரிலால் புரோஹித் இன்று காலை அசாம் மாநிலத்தின் கவுஹாத்தியில் இருந்து மேகாலயா மாநிலத்தின் சிலாங்கிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வாகனம் கிழக்கு காஷி மாவட்ட சாலையில் வந்து கொண்டிருந்த போது அவருக்கு பாதுகாப்பாக வந்த மற்றொரு வாகனம் மீது டிரக் மோதியது. 

இதில், பாதுகாப்பு வாகனத்தில் வந்த ஐந்து பாதுகாவலர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாக டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் கவர்னர் வந்த வாகனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com