திருச்சியில் மகிளா காங்கிரஸ் கூட்டம்

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை ஆகிய மாவட்டகளை சேர்ந்த மகிளா காங்கிரஸ் மண்டல கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சியில் மகிளா காங்கிரஸ் கூட்டம்
Published on

திருச்சி:

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை ஆகிய மாவட்டகளை சேர்ந்த மகிளா காங்கிரஸ் மண்டல கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவி ரேவதி பார்சியாலா தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்றார். மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருச்சி மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், மகிளாகாங்கிரஸ் மாவட்ட தலைவிகள் திருச்சி வடக்கு லோகாம்பாள், திருச்சி தெற்கு சரோஜாதேவி மற்றும் அரியலூர் மாரியம்மாள், பெரம்பலூர் இந்திராணி, நாகை ராணி மற்றும்  மாநில மகிளா காங்கிரஸ் ஜெயப்பிரபா, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரவானூர் விச்சு, சேவாதளம்  முரளி, உறந்தை செல்வம், அப்துல் குத்தூஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில்  முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் , திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் பேசும் போது,  காங்கிரசில்  தற்போது அதிக அளவில் பெண்கள் சேர்ந்து வருகின்றனர். ராஜீவ்காந்தி கொண்டு வந்த திட்டத்தின் மூலம் பெண்கள் உள்ளாட்சிகளில் பதவிகளை வகித்தார்கள். பெண்கள் முன்னேற காங்கிரஸ் தான் காரணம். வரும் சட்டமன்ற , பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டு எம்.பி., எம்.எல்.ஏ. வாக வருவார்கள். எனவே அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com