முகமூடி அணிந்து நகைக்கடையில் சாவகாசமாக கொள்ளையடித்த நபர்கள்- சிசிடிவி புகைப்படம் வெளியானது

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்கள், முகமூடிகள் அணிந்துகொண்டு சாவகாசமாக நகைகளை திருடும்போது பதிவான சிசிடிவி புகைப்படம் வெளியாகி உள்ளது.
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள்
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள்
Published on

திருச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்து இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். மொத்தம் 100 கிலோ எடையுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்த போலீசார் நகைக்கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, இரண்டு நபர்கள் குழந்தைகள் அணியும் விலங்குகளின் முகசாயல் கொண்ட முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிந்துகொண்டு கடைக்குள் நகைகளை கொள்ளையடிப்பது தெரியவந்தது. இந்த சிசிடிவி புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com