முத்தரப்பு டி20 கிரிக்கெட்- இந்திய பெண்கள் அணி இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. #INDWvAUSW
முத்தரப்பு டி20 கிரிக்கெட்- இந்திய பெண்கள் அணி இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது
Published on

3-வது விக்கெட்டுக்கு பெத் மூனே உடன் எலிசே விலானி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 114 ரன்கள் குவித்தது. பெத் மூனே 46 பந்தில் 71 ரன்னும், விலானி 42 பந்தில் 61 ரன்னும் விளாச, ஆஸ்திரேலியா பெண்கள் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது.

பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 பந்தில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரைத் தவிர மற்ற வீராங்கனைகள் மந்தனா (3), மிதலி ராஜ் (0), தீப்தி பக்வான் ஷர்மா (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தர்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்களும், அனுஜா பட்டில் 38 ரன்களும் அடிக்க இந்திய அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய பெண்கள் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நான்கு லீக் ஆட்டங்களில் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள இந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com