புதுவண்ணாரப்பேட்டையில் பஸ் டிரைவரை தாக்கிய திருநங்கை கைது

புதுவண்ணாரப்பேட்டையில் தனியார் பஸ் டிரைவரை தாக்கிய திருநங்கையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ராயபுரம்:

மேல்மருவத்தூரை சேர்ந்தவர் கோபி (28). தனியார் பஸ் டிரைவர். இவர், நேற்ற இரவு 9 மணி அளவில் புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயணா சாலையில் பஸ்சை நிறுத்திவிட்டு உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரியானா (25) என்ற திருநங்கை பஸ்சின் கதவை தட்டினார்.

டிரைவர் கோபி கதவை திறந்து பார்த்த போது, திருநங்கை ரியானா உள்ளே சென்று பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. கோபி பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை கல்லால் டிரைவர் கோபியை தாக்கினார். இதில் அவரது தலையில் ரத்தம் கொட்டியது.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை தாக்கிய திருநங்கை ரியானாவை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com