தேவதானப்பட்டி அருகே சுற்றுலா கார் மோதி வாலிபர் பலி

தேவதானப்பட்டி அருகே சுற்றுலா கார் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி அருகே சுற்றுலா கார் மோதி வாலிபர் பலி
Published on

தேவதானப்பட்டி:

கொடைக்கானல் குண்டுபட்டியை சேர்ந்த ரவீந்திரன் மகன் பிரதீப்குமார் (வயது27). இவர் காய்கறிகள் ஏற்றி செல்லும் வேன் ஓட்டி வந்தார். நேற்று கொடைக்கானலில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

காமக்காபட்டி செக் போஸ்ட் அருகே மற்றொரு வேன் டிரைவரான செக்காபட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்து பேசுவதற்காக தனது வேனை ஓரமாக நிறுத்தி விட்டு பிரதீப்குமார் கீழே இறங்கி வந்தார்.

அப்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாகனங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தன. ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் வந்துகொண்டிருந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து செக்போஸ்ட் மீது மோதி அங்கு நின்று கொண்டிருந்த பிரதீப்குமாரையும் கீழே தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேகமாக வந்த கார் மோதியதில் சின்னச்சாமி மற்றும் முத்தரசன் என்பவர்களும் படுகாயம் அடைந்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com