கோவையில் நாளை ஒரே நாளில், 10 நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல்ஹாசன்

கோவை பீளமேடு ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் கோவை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இருந்தபோதிலும் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நாளை (2-ந் தேதி) முதல் 2 நாட்கள் கோவை தெற்கு தொகுதி முழுவதும் வலம் வந்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

இதற்காக கமல்ஹாசன் இன்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்கிறார்கள். பின்னர் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து நாளை (2-ந் தேதி) காலை 9 மணிக்கு ரங்ககோணார் வீதி காட்டூர் மார்க்கெட் பகுதியில் கொடியேற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். 9.15 மணிக்கு காட்டூர் மாரியப்ப கோனார் வீதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். 10 மணிக்கு சித்தாபுதூர் பகுதியில் கொடியேற்றி வைத்து பேசுகிறார்.

10.30 மணிக்கு சிங்காநல்லூர் கரும்பு கடை மைதானம் அரவான் கோவில் எதிரில் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி வைத்து பேசுகிறார். 11 மணிக்கு சுந்தராபுரம் மற்றும் 11.30 மணிக்கு கெம்பட்டி காலனி மைதானத்தில் கட்சி கொடியேற்றி நன்றி தெரிவிக்கிறார்.

இந்த ஆலோசனையில் தற்போதைய அரசியல் நிலவரம், கோவையில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பன உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் பேசப்படுகிறது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு அம்மன் குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி 11 மணிக்கு புலியகுளம் மசால் வீதியிலும் 11.30 மணிக்கு புலியகுளம் கல்லுக்குலி பகுதியிலும் கொடியேற்றி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com