

நாசரேத்:
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.
இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகிறார்கள். ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் ஜெபித்து தேவ செய்தி வழங்குகிறார். குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் விசேஷ பிரார்த்தனை நடக்கிறது.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து வருகிறார்கள். #tamilnews