

திருச்சி:
தமிழ்நாடு மின்சார வாரியம் ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை 11-ந்தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுகனூர், சி.ஆர்.பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், வாழையூர், சனமங்கலம், மணியங்குறிச்சி, ரெட் டிமாங்குடி, பி.கே.அகரம், நெய்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், சீதேவிமங்கலம், கூத்தனூர், ஆவாரவள்ளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.