டி.என்.பி.எல்: 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்

தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி திருவள்ளூர் வீரன்ஸ் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்: 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்
Published on

நெல்லை:

தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தை மதுரை சூப்பர் ஜெயிண்ட் மற்றும் விபி திருவாள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. ஓவர்களும் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அருண் கார்த்திக் 68(38), மணி பாரத் 67(36) ரன்கள் குவித்தனர்.

பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருவள்ளூர் அணி விளையாடியது. அந்த அணி 13.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மதுரை சூப்பர் ஜெயிண்ட் அணி தனது 5-வது தொடர் தோல்வியை தழுவியது. திருவள்ளூர் அணிக்கு இது மூன்றாவது வெற்றி ஆகும்.

கேப்டன் அபரஜித் அபாரமாக விளையாடி 35 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஹரி நிசாந்த் 37(23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மதுரை அணியில் கார்த்திகேயன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com