நாளை கிருஷ்ண ஜெயந்தி - தலைவர்கள் வாழ்த்து

நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

‘குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல், தெளிந்த தண்ணீரைப் போல மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெற்று, மன நிம்மதியோடு வாழலாம்’ என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை எப்போதும் நினைவில் கொண்டு இலக்குகளில் வெற்றிகளைக் குவித்திடுவோம். எத்தனை இன்னல்கள் வந்தாலும் அறம் காத்து நின்று, அதர்மத்தை வீழ்த்தி, தர்மத்தை நிலை நிறுத்திட கிருஷ்ண ஜெயந்தி நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

உண்மையான அன்பும், பக்தியும் கொண்டவர்களிடம் இறைவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து அவர்களோடு கலந்து பேசி மகிழ்ந்து வாழ்ந்திடுவான். நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

தீயவர்களை அழித்த மகாவிஷ்ணு அவதரித்த இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா:-

கீதையை தந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலாஸ்டமியாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அசுரர்களை வதம் செய்ய பகவான் கிருஷ்ணர் அவதரித்த இந்நாளில் அனைத்து இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com