தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
அரசாணை வெளியீடு
Published on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியாததாலும், கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதாலும் தமிழக அரசு கல்லூரி செமஸ்டர் தேர்வை ரத்து செய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்து. அதில் ‘‘சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும் நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com