

நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மீனவரணி செயலாளர் சபின், மகளிரணி தங்கம் நடேசன், மாநில கமிட்டி உறுப்பினர் அருண் கிரி, தயாபரன், லாரன்ஸ் மற்றும் எனல்ராஜ், ரமணி, வட்டார தலைவர்கள் ஜெரால்டுகென்னடி, கால பெருமாள், கிளாட்சன், நாஞ்சில் செல்வராஜ், அசோக்ராஜ், வைகுண்ட தாஸ், கலை பிரிவு அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட, வட்டார, நகர பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்ட எல்லையில் ஏராளமான வாகனங்களில் சென்று உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
ஒகி புயலால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக கிடைத்திட மாவட்ட கலெக்டர் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.