பட்ஜெட் கூட்டத்தொடர் - கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் - கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
Published on

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக காலை 9 மணி முதலே உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வரத் தொடங்கினர்.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்துள்ளனர். பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிச்சாமி அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே, பட்ஜெட் தாக்கலின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை இன்று கூட்ட வேண்டும் என தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com