முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்- 36 பேர் மீது வழக்குபதிவு

திருவாரூர் அருகே முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்து போராட்டம் நடத்திய காட்சி.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உருவபொம்மையை தி.மு.க.வினர் எரித்து போராட்டம் நடத்திய காட்சி.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், தென்னவராய நல்லூரில் மாங்குடி ஊழவர் கூட்டுறவு சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெறவில்லை.

இதுபற்றி அறிந்த தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய புகாரின் பேரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் போராட்டத்தில் ஈடுப்பட்ட தேவா உள்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com