

தொண்டி:
திருவாடானை பகுதிகளில் 2016-17-ம் வருடத்திற்கு விவசாயிகளுக்கு உரிய பயிர்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் முகம் மதலி, மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் முருகன், தாலுகா செயலாளர் சேதுராமு, தாலுகா பொருளாளர் போஸ், தாலுகா துணை தலைவர் நாகநாதன் முன்னிலை வகித்தனர்.
பின்னர் விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். தாசில்தார் தாமஸ் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பயிர்காப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு கிடைக்க விரைவான ஏற்பாடுகளை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயிர்காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று உறுதியளித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.