திருப்பூரில் 1 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி பலி

திருப்பூர் அருகே திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து பிறந்த பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான குழந்தை
பலியான குழந்தை
Published on

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர்பாளையம் படேல் வீதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 30). பனியன் தொழிலாளி. இவரது மனைவி பாண்டி யம்மாள்(25). இவர்களுக்கு 1 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று காலை கண்ணன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாண்டியம்மாளும், குழந்தை கனிஷ்காவும் இருந்தனர். குழந்தை கனிஷ்கா தனது தாயுடன் விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் பாண்டியம்மாள் துணி துவைப்பதற்காக வீட்டிற்குள் சென்று துணி எடுக்க சென்றார்.

அப்போது குழந்தை வீட்டின் முன் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் தண்ணீரை கோதி ஊற்றி விளையாடி கொண்டிருந்தது.

இதில் எதிர்பாராத விதமாக குழந்தை கனிஷ்கா வாளிக்குள் தலைகீழாக விழுந்து விட்டது. தண்ணீரில் மூழ்கிய கனிஷ்கா சத்தம்போட்டது. ஆனால் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் குழந்தை கனிஷ்கா முச்சுத்திணறி மயங்கி விட்டது.

இந்த நிலையில் துணியை எடுத்து கொண்டு வெளியில் வந்த பாண்டியம்மாள் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து கோவில் கோவிலாக சென்று வரம் பெற்று பிறந்த குழந்தை இறந்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com