மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக ஃகோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கைது

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிரபல ஃகோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக ஃகோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கைது
Published on: 

நியூயார்க்:

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிரபல ஃகோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜூபிடர் நகரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் பிரபல ஃகோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மது அருந்திவிட்டு காரை ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து, அந்நகர போலீசார் அவரை கைது செய்தனர். சிறிது நேரத்தில் சட்டரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அவர் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார்.

இதனையடுத்து, போலீசார் அவரை விடுவித்தனர். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடன் பேச மறுத்து விட்டார். 41 வயதான டைகர் உட்ஸ்க்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை சமீபத்தில் நடந்தது. காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் அவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டி போலீசில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

14 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த டைகர் உட்ஸ், காயம் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து முக்கிய ஃகோல்ப் தொடர்கள் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com