துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துறையூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்
Published on

துறையூர்:

துறையூர் அருகே உப்புலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காமாட்சிபுரம் ஊராட்சியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து காமாட்சிபுரம்கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும், புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் துறையூர்- புளியஞ்சோலை சாலையில் காமாட்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்தும் உப்புலியபுரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளாச்சி அலுவலர் ரேவதி, மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com