அல் அக்சா மசூதியில் நடத்திய பாதுகாப்பு சோதனையை எதிர்த்து போராடிய 3 பாலஸ்தீனியர்கள் பலி

ஜெருசலேம் நகரில் உள்ள புனித அல் அக்சா மசூதியின் வெளியே நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்தினர்.
அல் அக்சா மசூதியில் நடத்திய பாதுகாப்பு சோதனையை எதிர்த்து போராடிய 3 பாலஸ்தீனியர்கள் பலி
Published on

டெல் அவிவ்:

ஜெருசலேம் நகரில் உள்ள புனித அல் அக்சா மசூதியின் வெளியே நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல் அக்சா மசூதி உள்ளது. இங்கு பாலஸ்தீனைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் இந்நகரில் பாதுகாப்பு பணியிலிருந்த இஸ்ரேலிய பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

இதனால், மசூதிக்கு வெளியே மெட்டல் டிடக்டெர்கள் அமைத்து இஸ்ரேலிய போலீசார் அனைவரையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, போலீசார் அங்கு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில், 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com