தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்-100 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து வேலூரில் சாலையில் படுத்து போராட்டம் செய்த தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தே.மு.தி.க.வினர் போராட்டம்-100 பேர் கைது
Published on

வேலூர்:

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், போராட்டம் நடத்திய பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் இன்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், பொருளாளர் பிரதாப், துணை தலைவர் புருசோத்தமன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் பேரணியாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சர்வீஸ் சாலையில் மறியல் செய்தனர்.  அப்போது தே.மு.தி.க. பெண் நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்து புரண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷம் எழுப்பினர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com