பாம்பு கடித்து சிறுவன் பலி

பாம்பு கடித்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி ஊராட்சி திருமாளம்பொய்கை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் ஹரிஷ் (வயது8). சம்பவத்தன்று சிறுவன் பட்டாசு வெடிப்பதற்கு வீட்டில் இருந்த ஊதுபத்தியை எடுக்க பூஜை அறைக்கு சென்றுள்ளான். அப்போது ஹரிசை பாம்பு கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் இறந்தான். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com